Play and Learn
To learn easily we have given rebus stories and Tamil grammar in English and Tamil languages. We hope this effort helps you.
Tamil Grammer
தமிழை எளியதாக கற்க உதவும ஒலி ஓவியங்களும், தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் விளக்கப்படும் இலக்கணமும் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். .
எளிய, இலவச மின்தமிழ்!
செம்மொழியாம் தமிழ் மொழி அறிவையும் அதை அனுபவிக்கும் ஆனந்தத்தையும் அளிப்பதே தமிழ் அநிதத்தின் நோக்கமாகும். தமிழ் எழுத்துக்கள், தமிழ் சொற்தொகுதி,தமிழைக் கிரகித்துக் கொள்ளும் தன்மை, தமிழ் ஒலியறிவு இவற்றை அடுத்த தலைமுறையினர் எளிதாகவும் இலவசமாகவும் கற்க தமிழ் அநிதம் வழி வகுக்கிறது. தமிழ் அடிப்படை இலக்கணமும் விளக்கப்படுகிறது.
தமிழ் மூன்று வகைகளாகப் பிரிக்கப் படுகிறது.அதனால் முத்தமிழ் என்று அழைக்கப்படுகிறது. ஒரு மொழியின் முக்கியமான மூன்று பரிணாமங்களையும் தமிழ் உள்ளடக்கியுள்ளது. இயல் தமிழ் (உரைநடை), இசைத்தமிழ்(இசை), நாடகத்தமிழ் (நாடகம்) என்று தமிழ் வகைப் படுத்தப்படுகிறது. எண்ணங்களை எளிமையான முறையில் வெளிப்படுத்த உதவுவது இயல் தமிழ். உரைநடையும் செய்யுளும் இயல் தமிழின் அங்கங்களாகும். எண்ணங்களை இசையுடன் சேர்த்துப் பாடலாக வெளிப்படுத்த உதவுவது இசைத்தமிழ்.இசைத் தமிழிலில் செய்யுள் இசையோடு இணைந்து வரும். எண்ணங்களை நடிப்பு மூலமாக வெளிப்படுத்த உதவுவது நாடகத் தமிழ். இங்கு இயல் தமிழின் அடிப்படைகள அறிந்து கொள்ளலாம்.
Easy Free E-Tamil!
TamilUnlimited aims to spread both knowledge and enjoyment of the classical language, Tamil. Our site hosts activities that increase knowledge of Tamil letters and words Tamil vocabulary, comprehension, phonological awareness easily and for free, Tamil The basic Tamil grammar is also explained.
There are three types of Tamil. So It is called “Tamil the three”. Tamil covers all three important aspects of a language, prose music, and drama.Tamil for prose helps one express their thoughts in a very simple form of prose and poems called cheyuLL. Music Tamil helps one express their thoughts with music cheyuLL is accompanied by music in isai Tamil. Tamil in Drama helps To express thoughts through acting. We will learn the basics of Tamil for prose.