அடுத்த தலைமுறையின் தமிழ்!

Taking Tamil to the Next Generation!

எழுத்துக்களின் ஒலியளவு


தமிழ் இலக்கணத்தின் மற்றுமொரு முக்கியமான பகுதி தமிழின் ஓசை வடிவமாகும். தமிழ் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் தனக்குரிய ஒலி வடிவைப் பெற்றுள்ளன. அதனால் எழுத்துக்கள் ஒலிப்பதற்கான நேர அளவீடை நாம் புரிந்து கொல்ளுதல் அவசியம். இந்த நேர அளவீடு தமிழ் இலக்கணத்தில் மாத்திரை எனப்படும் நாம் கை நொடிக்கும் நேரம் அல்லது இயல்பாக கண் சிமிட்டும் நேரம் ஒரு மாத்திரை என்று அழைக்கப்படுகிறது.

ஒலிப்பதற்கு ஒரு மாத்திரை அல்லது ஒருவினாடி எடுத்துக் கொள்ளும் எழுத்துக்கள் குறில் என்று அழைக்கப்படும். ஒரு எழுத்து ஒலிக்க இரண்டு வினாடிகள் எடுத்துக் கொண்டால் அவை நெடில் என்று அழைக்கப்படும். சில எழுத்துக்கள் ஒலிப்பதற்கு அரை வினாடியே எடுத்துக் கொள்ளும் அவை ஒற்று என்று அழைக்கப்படும், உயிரெழுத்துக்களில் அ, இ , உ, எ,ஒ என்ற எழுத்துக்கள் ஒலிப்பதற்கு ஒரு மாத்திரை அளவே எடுத்துக் கொள்வதால் அவை குறில் எழுத்துக்களாகும். ஆ, இ,ஊ,ஏ,ஐ,ஓ,ஒள என்ற எழுத்துக்கள் நெடில் என்று அழைக்கப்படும். ஆய்த எழுத்து ஒலிப்பதற்கு அரை வினாடி தான் தேவை. அதே போல மெய் எழுத்துக்கள், க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப், ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் ஆகிய எழுத்துக்களும் ஒற்று என்று அழைக்கப்படும்.

சிலநேரங்களில் இரு வார்த்தைகளை இணைக்கும் போது ஒலி மாறுபடுமே என்ற சந்தேகம் நமக்கு உண்டாகலாம். சிலசமயங்களில் ஒலி நீண்டு ஒலித்தால் அது அளபடை என்று அழைக்கப்படும். அளபடை உயிரளபடை ஒற்றளபடை என்று இரண்டு வகைப்படும். சில நேரங்களில் நீண்டு ஒலிக்க வேண்டிய ஓசை குறுகி ஒலித்தால் அது குற்றியல் என்று வழங்கப்படும். எந்த எழுத்து குறைந்து ஒலிக்கிறதோ அதைப் பொறுத்து குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக் குறுக்கம் ஓளகாரக் குறுக்கம் மகரக் குறுக்கம் ஆய்தக் குறுக்கம் என்று வகைப் படுத்தப் படும். இவை பற்றி இன்னும் விளக்கமாக சார்பெழுத்துக்களில் பார்க்கலாம்.

Letter duration

Another important thing to understand in the Tamil grammar is the duration of the letters. Tamil being a phonetic language every sound has letter form representation. The English word syllable is the right way to explain how each letter of the Tamil language has its own sound. By learning the phonetic value of the letters one can easily start to read the language. The pronunciation of these letters depends upon how long it takes to make the particular sound. The unit of measure is called a Mathirai. A mathirai is the time it takes to snap your fingers or blink your eyes naturally. It is usually a second.

So when we take a second to sound a letterout, that letter is called kurrill. When we take two seconds to sound out a letter it is called neddill. Then there are some letters that needs only half a second to pronounce. These letters are called ottuRRu. In vowels, the letters அ, இ, உ, எ, ஒ are kurril. These need only one second to pronounce. In vowels the letters ஆ, ஈ, ஊ, ஏ,ஐ, ஓ, ஒள are called neddill. These need two seconds to pronounce. The consonants க்,ங்,ச்,ஞ்.ட்.ண்.த்.ந்.ப்.ம்.ய்.ர்.ல்.வ்.ள்.ற்.ன் has only half a second duration. The letter ayyudham also only takes half a second to pronounce. So consonants and the ayyudham are called ottrru.

We will understand the syllable mechanism of the Tamil letters as we keep practicing the making the sound. As we practice we may doubt what will happen when you combine the words to make the words. Sometimes the short sounds longer than usual. Other times there are chances for a longer sound to come out shorter. The lengthening of the sound of the letter is called aLLabadai. Allabadi is of two types. Uyiirrallabadi ottRRaLLabadai. When a letter takes shorter duration to pronounce it can be addressed as kutttriyall(குற்று+இயல்) Depending on which letter adobts the shorter sound it is classified as kuttriyalugaram. kuRRiyaligarram aikaarakkuRukam, owgarakuRukkam majarakuRukkam and ayyudahkuRukkam. A brief explanation is given in dependent letters.